சதக்கா அறக்கட்டளை நிதியத்தால் போசாக்கான உணவு வழங்கல்

0
174

ஆரம்பநெறி பாடசாலை மாணவர்களுக்கு சதக்கா அறக்கட்டளை நிதியம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு நிறைந்த உணவுப் பண்டங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர் அஸ் ஸெய்யித் உமர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் ஸதக்கா அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் எம்எஸ். அபுள்ஹஸன்ரூபவ் செயலாளர்
எம்எம்ஏ. சாபி ரூபவ் திட்ட முகாமையாளர் பொறியியலாளர் ஐ.
காலிதீன் மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உணவிற்கு நிகராக குறித்த நிறுவனத்தின் நிதியுதவியுடன் தினமும் போசாக்கான உணவுகள் வழங்கப்படுகின்றன.

சதக்கா அறக்கட்டளை நிதியம் கடந்த இரண்டு மாதகாலமாக ஏறாவூர் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்கான வாகன ஏற்பாடுகள் முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது விசேட தேவையுடைய மாணவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.