கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களி;ல் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை ஆபத்தான நோய்கள் உள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சிரேஸ்டபிரஜைகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்,அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.