சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா யாழில் இடம்பெற்றது.

0
187

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா யாழ்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், முல்லைத்தீவு , கிளிநொச்சி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதுலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர். இதன்போது நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பிரசு வழங்கி வைக்கப்பட்டது.