அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாவது நாளாக நேற்றிரவு ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தலைமையில் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், விவசாய அமைப்புக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
சம்மாந்துறை பொதுசந்தையிலிருந்து ஆரம்பமான போராட்டம்
ஹிஜ்ரா சந்திவரை சென்றது. ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் சம்மாந்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.