சவளக்கடை வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலத்தின் முப்பெரும்விழா பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் க.பொ.த. உயர் தர தின விழா, 2020, 2021ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு, மருதம் மலர் வெளியீடு என்பன இடம்பெற்றன.
வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் முனாஸிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹைதர் அலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் நைறூஸ்கான், அல் கரீம் பௌண்டேசன் தலைவரும் சமூக சேவையாளருமான ஹலீம், நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவி தவிசாளர் அப்துல் சமட், உறுப்பினர்களான சுபைதீன், நவாஸ், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஸம்ஸம், உதவி அதிபர் நஜீப் ஸாலித்தீன், உட்பட பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கபொ.த.உயர் தர தின விழா இடம்பெற்றதுடன், கடந்த வருடங்களில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மருதம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
அத்துடன் முன்னாள் ஆசிரியர் டீ.எம்.மௌசூன் இலங்கையின் தேசிய மரமான நாகமரம் ஒன்றை பாடசாலை வளாகத்தில் நடுவதற்காக பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.