சவூதி அரேபியாவில் உள்ள இலங் கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வர ஜனாதிபதி உத்தரவு!

0
195

சவூதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங் கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வர தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி உத்தரவின்படி நாள் ஒன்றுக்கு இரண்டு விமா னங்களில் இலங்கையர்களை அழைத்து வர தீர்மானித் துள்ளதாக கொவிட்- 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரை யாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் விடுதிகளில் தங்கியிருப்போர் மற்றும் பணிப்புரிவோர் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளமை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவந்துள்ளது.