சாவகச்சேரி கச்சாயில் வெள்ளத்தை வெளியேற்ற இளைஞர்கள் நடவடிக்கை

0
17

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட கச்சாய் ஊர் எல்லை பகுதியில் தேங்கி நின்ற வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள 523 ஆம் படையணி முகாமுக்கு அண்மையாக குடியிருக்கும் சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ள வடிகால் ஏற்படுத்தப்பட்டு கடலுக்குள் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

நகர சபையின் அனுமதியுடன் கடந்த மூன்று நாட்களாக பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயல்பாடு காரணமாக வெள்ளம் குறைவடைந்து வருகின்றது.

இதேவேளை, பிரதேச இளைஞர்களின் முன்மாதிரியான இந்தச் செயல்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.