சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இராஜினாமா செய்யவேண்டும் என ஐக்கியதேசியகட்சியின் பிரதிதலைவர் ருவான்விஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சரும் அரசாங்கமும்; கொரோனா வைரஸ்மீதான கட்;டுப்பாட்டை இழந்துவிட்டதாக ருவான் விஜயவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதாரவிடயங்களில் நிபுணத்துவம் மிக்க ஒருவரை சுகாதார அமைச்சராக ஜனாதிபதியும் பிரதமரும் நியமிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தமுடியாது நாட்டு மக்களின் சுகாதாரத்தை உடல்நலத்தை பாதுகாக்ககூடிய ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளது, ஜனாதிபதிக்கு பலமான அதிகாரங்கள் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ள ருவான் விஜயவர்தன இந்த வலிமையான சக்திகளுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் போராடவேண்டியிருக்கும் எதிர்கட்சிகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இணையவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.