சுகாதார அமைப்பினை பலவீனப்படுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க தீர்மானம்

0
88

சுகாதார அமைப்பை பலவீனப்படுத்துவதற்கு காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் தமது கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.