28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுன்னாக வாள்வெட்டு சம்பவ பிரதான சந்தேக நபர்கள் மூவர் சரண்!

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் சட்டத்தரணி மூலம் சரணடைந்துள்ளனர் என சுன்னாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடிருந்த

உயிரிழந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு
யாழில் 21 வேட்டுகள் முழங்க மரியாதை
(படம்)

யாழ்ப்பாணம், ஜன. 27
யாழ். – கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்துக்கு 21 வேட்டுகள் முழங்க நேற்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இவர் கடந்த 1958 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த 23 ஆம் திகதி கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிமலை இந்து மயானத்தில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது. இந்த இறுதி நிகழ்வில் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, இராணுவ படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். (அ)

இந்திய குடியரசு தின நிகழ்வு
யாழ். துணைத் தூதரகத்தில்
(2படம்)

யாழ்ப்பாணம், ஜன. 27
இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராலய அலுவலகத்தில் இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகிய குடியரசு தின நிகழ்வில் யாழ்.இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ்.இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டது.
இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (அ)

யாழ். மாநகர முதல்வரிடம்
அதிகாரங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம், ஜன. 27
யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படும் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார்.
மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால், இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 14 நாள்களுக்கு மாநகர சபையில் ஏற்படும் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தலை அதிவிசேட வர்தமானியின் ஊடாக ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (இடைநேர் விளைவான) சட்டத்தின் 2(1)(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய (252 ஆம் அத்தியாயமான) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 326 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிவித்தலின்படி, இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 14 நாள்களுக்கு அல்லது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படும் வரை சம்பளங்களும் படிகளும், பயணப் படிகள், வழங்கு பொருள்களும் தேவைப் பொருள்களும், ஏற்றியிறக்கல் தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு சேவைகள், பழுதுபார்த்தலும் பராமரித்தலும், வட்டிக் கொடுப்பனவு, சபை ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் இலங்கை வங்கி லீசிங் கொடுப்பனவு ஆகிய செலவுகளை 2023 ஆம் ஆண்டு உத்தேச மதிப்பீட்டுக்கு அமைவாக செவுகளை மேற்கொள்வதற்கு யாழ். மாநகர முதல்வருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (அ)

அரசின் வரி கொள்கையை எதித்து
விரிவுரையாளர்களும் போராட்டம்

கொழும்பு, ஜன. 27
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக் கொள்கைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர் ரொகான் லக்சிறி அறிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்-
இலங்கையில் ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான வருமான வரிக் கொள்கை எம்மை வெகுவாகப் பாதித்துள்ளது. நாட்டின் நற்பிரஜைகளாக – நாட்டின் அபிவிருத்திக்காக வரி அறவிடப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.
ஆனாலும் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வரிக் கொள்கை நியாயமற்றதும், முறையற்றதுமாகும். இதனால் எமது சம்மேளத்தின் உறுப்பினர்கள் பலர் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு மாற்றாக கைக்கொள்ளத்தக்க திட்டங்களை எமது சம்மேளனம் அரசாங்கத்துக்கு முன்மொழிந்திருந்தது. ஆனால் அவற்றுக்கு அரசாங்கத் தரப்பிடமிருந்து எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை. இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் சபையின் தலைவர் ஆகியோருக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தோம்.

இதனால், சட்ட ரீதியாக எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். கடந்த 24 ஆம் திகதி கூடிய எமது பிரதிநிதிகள் சபை இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை எமது உறுப்பினர்கள் பல்கலைக்கழகங்களில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்குபற்றுவதில்லை என்று முடிவு செய்துள்ளது-என்றார். (அ)

(லீட்)
மீற்றர் வட்டிக்கு கொடுத்த பணத்தை
வசூலிப்பதற்காக கடத்தி சித்திரவதை!

தொடர்புடையோரை அடையாளம் காண
உதவுமாறு யாழ். பொலிஸார் வேண்டுகோள்
(படம்)

யாழ்ப்பாணம், ஜன. 27
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளி தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. (அ)

மனநோயாளிகளாக மாறியவர்களின்
எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு

கொழும்பு, ஜன. 27
பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதார பிரச்னைகளால் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதால் மீண்டும் மனநோய்கள் அதிகரித்து வைத்தியசாலையில் அனுமதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் தங்குவதற்கு எதிர்காலம் இல்லை என விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் மனநோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளிநாடு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மன உளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிபுணர் வைத்தியர், கல்வி நடவடிக்கைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் கணிசமானோர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டார். (அ)

தேர்தல் நடத்துவது
பொருத்தமானதா?

கேட்கிறார் மதுர விதானகே

கொழும்பு, ஜன. 27
தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என சிந்தித்து பார்க்கவேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தாங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தயாராகவே இருப்பதாகவும், எனினும், இப்போது நாடு இருக்கின்ற நிலையில் தேர்தலை ஒத்திப்போடுவதே சிறந்தது என அவர் தெரிவித்தார்.
அதில் மிஞ்சும் பணத்தை எடுத்து பொருளாதாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒத்திப்போடுவது நல்லது என்பதுதான் தனது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்கு தேர்தலை ஒத்திப்போட்டால் ஆயிரத்து 200 கோடி ரூபா நிதி மீதமாகும். அதை வைத்து எவ்வளவோ சேவை செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் பொதுவாக எல்லா அரசியல்வாதிகளையும் வெறுக்கிறார்கள். இப்போதைய பொருளாதார நிலையின் கீழ் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.
தனக்கு வாக்களித்த 70 ஆயிரம் மக்கள்கூட இப்போது என்ன முடிவெடுத்திருக்கின்றார்கள் என்று கூற இயலாது எனவும் அவர் சொன்னார்.
சம்பளப் பிரச்னை இருக்கின்றது. எரிபொருள் பிரச்னை இருக்கின்றது. வைத்தியசாலைகளில் பிரச்னை இருக்கின்றது. எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்குப் பணம் தேவைப்படுகின்றது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதை விடவும் மக்களின் பிரச்னைகளை எப்படித் தீர்க்கலாம் என்றே எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். (அ)

னர்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் சட்டத்தரணி மூலம் மூவரும் சரணடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நான்கு பேர் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர் எனவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles