இலங்கையிலள்ள சுவிஸ்சர்லாந்து உயர்ஸ்தனிகர் டொமினிக் பெக்லர் இன்று மட்டக்களப்பு காத்தான்குடிக்கு வருகை
தந்தார்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்
சந்திப்பு காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது
தற்போதைய சூழ்நிலை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுவிஸ்சர்லாந்து உயர்ஸ்தானிகர் இதன் போது கேட்டறிந்து கொண்டார்
சந்திப்பின் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரவூப் ஏ மஜீத், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி உட்பட சம்மேளன முக்கியஸ்தர்கள்
கலந்து கொண்டனர்
சந்திப்பின் போது காணிப் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுவிஸ்சர்லாந்து உயர்ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர்
சபீல் தெரிவித்தார்