ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்க தரப்பு கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டுப் பணியாளராக இருக்கிறார் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதனிடையே, கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், ‘எவ்வாறாயினும் ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் இந்த ஆதரவை வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டார்.