ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவனின் முன்மாதிரியான செயற்பாடு!

0
383

ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்தி 

க்கு பொறுப்பான  மேலதிக செயலாளரின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு அனைவரும் பாராட்டு தெரிவிப்பு

இந்திய அரசின் கடற்தொழில் இணை அமைச்சர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு  வருகை தந்திருந்த நிலையில்

 அவரை வரவேற்பதற்கு பலாலி விமான நிலையத்திற்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை யூனியன்  கல்லூரி மாணவர்கள் வரவேற்பளிப்பதற்கு பிரதேச செயலகத்தின் அழைப்பில் அழைக்கப்பட்டு கைகளில் பூக்களை ஏந்தி வரவேற்பளிக்க தயாராகிய போதிலும்

இந்திய அமைச்சரது வருகை தாமதமாகிய நிலையில் பாடசாலை மாணவர்களை நீண்ட நேரமாக பலாலி விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் வெயிலில் காத்து நிற்க வைத்திருந்தனர்

 குறித்த விடயம் தொடர்பில அங்கு வருகை தந்திருந்த அரச அதிகாரிகள் பலர் பலாலி  விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் மாணவர்களை வெயிலில் நிற்காது உள்ளே கூப்பிட்டு இருத்துமாறு கோரியபோது அது மேலிடத்து  உத்தரவு உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்,

அவ்விடத்திற்கு வந்திருந்த ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல் இளங்கோவன் வெயிலில் நின்ற  மாணவர்களை உள்ளே அழைக்குமாறு  கோரியபோது அவ்வாறு அழைக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முரண்பட்டபோது

நான் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மேலிட உத்தரவு என்றால் அதற்கு நான் பொறுப்பு ஏற்கின்றேன் நீங்கள் முதலில் வெயிலில் நிற்கும் மாணவர்களை உள்ளே அழையுங்கள் எனக் கூறி வெயிலில் நின்ற அனைத்து மாணவர்களையும் பலாலி விமான நிலையத்திற்குள்  அழைத்திருந்தார்

 பலாலி விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெயிலில் நின்ற மாணவர்களை  உள்ளே அழைத்துச் செல்ல அனுமதி வழங்காமைக்கு அவ்விடத்தில் நின்றோர் கண்டனத்தை வெளியிட்டனர்,