24 C
Colombo
Wednesday, February 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி தலைமயிலான சர்வகட்சி கூட்டம் இன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் சர்வகட்சி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இனப் பிரச்சினை தீர்வுக்கு ஒருமித்த கருத்தை எட்டுவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியத் தரப்பு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரனும் தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்பார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வேறுபணிகளின் நிமித்தம் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், விமல் வீரவன்ஸ தலைமையிலான கூட்டணியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

Related Articles

மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக மாத்திரம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக மாத்திரம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.