24 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று முன்தினம் 184 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வன்முறை தொடர்பாக 1 முறைப்பாடும், சட்ட மீறல்கள் தொடர்பாக 181 முறைப்பாடுகளும், ஏனைய விதிமீறல்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
ஜூலை 31 முதல் நேற்று முன்தினம் வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 3 ஆயிரத்து 641 இற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 574 முறைப்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles