29.2 C
Colombo
Sunday, October 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி மற்றும் பொம்பியோவுடனான சந்திப்பு இன்று

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

நேற்று (27) இரவு 7.35 மணியளவில் இலங்கை வந்தடைந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் உட்பட குழுவினரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி உட்பட அமெரிக்க தூதவர அதிகாரிகள் வரவேற்றிருந்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இரு தரப்பு கலந்துரையாடலை அடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்.

இதனையடுத்து அவர் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மாலைத்தீவு நோக்கி பயணிக்கவுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles