அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் நவம்பர் 9 அல்லது அதற்கு முன்னர் கையளிக்கவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் பொது அதிகாரிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கியது குறித்து ஆராயவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை ஒக்டோபர் 29இல் நிறைவு செய்திருந்தது.
மேலும் ஆணைக்குழு தான் பெற்றுக்கொண்ட 1842 முறைப்பாடுகளில் 112 முறைப்பாடுகளை ஆய்வு செய்துள்ளது. எஞ்சிய முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் அரசியல் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.