ஜோ பைடனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

0
223

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜோ பைடனுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
ஜோ பைடனுக்கு, ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸிற்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இது ஒரு மிக முக்கியமான வெற்றியெனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.