சாம்பல் தீவு கழிமுகத்திலிருந்து ஒட்டுமொத்தக் களப்பும் உள்ளடங்கும் வகையில் இரண்டு பக்கமும் நீர் வெளியேறுகின்ற பிரதேசத்திலிருந்து 500அடி வரையிலான பகுதியை மீன்பிடி திணைக்களத்தினுடைய முகாமைத்துவத்திற்குட்பட்ட பிரதேசமாக மாற்றியமைப்பதற்கும் அப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை வனஜீவராசிகள் திணைக்களம் உட்பட ஏனைய திணைக்களங்களினுடைய பராமரிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு துறைசார் நிறுவனங்களை இணைத்து செயற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் உரிய அமைச்சுக்களோடு தொடர்புகொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு மீனவர்களுடைய சாதகமான விடயங்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்றும்
களப்புக்கும் மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரிய திணைக்களத்தினுடைய அதிகாரிகள், மீனவ சங்கங்களினுடையை பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.