
வலுவான நிலையான அனைத்துப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே, இலங்கையின் எதிர்கால இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், மும்பையில் நடைபெற்ற ‘இலங்கையில் முதலீடு’ என்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
வலுவான நிலையான பேரின பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், அதிக போட்டி நிறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், விரைவான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி செல்ல தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் என்பன இலங்கையின் எதிர்காலத்திற்கான பிரதான உத்திகளாகுமென்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

