அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லுவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு டொனால்ட் லு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.