மட்டக்களப்பு புளியடிக்குடா செபஸ்தியார் அவசரகால செயற்பாட்டுக் குழுவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர்வுணவு பொருட்களை வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நொச்சிமுனை கிராமசேவை பிரிவில் நாளாந்த தொழில் பாதிப்புக்குள்ளான வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலர்வுணவு பொருட்கள் அருட் தந்தை ரிச்சட் அடிகளாரின் தலைமையில் செபஸ்தியார் அவசரகால செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .
இதேவேளை பயணத்தடையினால் நாளாந்தம் தொழில் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மட்டக்களப்பு கருவப்பங்கேணி மற்றும் தன்னாமுனை பகுதி மக்களுக்காக வழங்குவதற்கான உலர்வுணவு பொருட்களை கருவப்பங்கேணி புனித வானத்து அந்தோனியார் ஆலயம் மற்றும் தன்னாமுனை உப ஆலயம் இலங்கை மாதா பங்கு அருட் தந்தையர்களிடம் கையளிக்கப்பட்டது
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்குடன் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த உலர்வுணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
