இந்தியாவின் இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி வந்து கீரிமலையில் நின்ற சமயம் நேற்று முன்தினம் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம் திகதி அதிகாலை இவர் தரை இறங்கியுள்ளார். இவ்வாறு தரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் கீரிமலைக்குச் செல்வதற்கு ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
இவ்வாறு வாடகைக்கு அமர்த்திய ஓட்டோவுக்கு 8 ஆயிரம் இந்திய ரூபா பணம் வழங்கி கீரிமலையில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது சகோதரியின் குடும்பமும் இந்தியாவில் இருந்து வருகை தந்த 28 வயது இளைஞரான ஜெகநாதன் -ஜெனன் என்பவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.