தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வார இறுதியில் வெளியீடு!

0
216

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே, இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதி இடம்பெற்றதுடன், 337,591 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.