திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதினால் இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குரங்குகள் பயன்தரும் மரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கும் சேதம் விளைவிப்பதாகவும், வீடுகளுக்குள் புகுந்து வீட்டு உபகரணங்களும் சேதம் விளைவிப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சிறுபிள்ளைகளை குரங்குகள் தாக்க முனைவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.