திருகோணமலை மாவட்ட மனித உரிமை பாதுகாவலர்களின் திறனை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
வாழ்வுரிமைக்கான மனித உரிமைகள் மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற செயலமர்வில் மனித உரிமை பாதுகாவலர்கள் என்றால் யார்? மனித உரிமை பாதுகாவலர்கள் என்பதன் வரைவிலக்கணம், மனித உரிமை மீறல்கள் எவ்வாறு எங்கு நடைபெறுகிறது? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன
செயலமர்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.