திருகோணமலை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் இன்று டெங்கு பரிசோதனை மற்றும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக வீடுகள்,பொது இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.