திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் சிரமதான பணிகள்

0
229

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள தெய்வீக கிராமம் நிகழ்வினை முன்னிட்டு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இச் சிரமதான நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாள ஏ.அரசரெத்தினம் தலைமையில் திருக்கோவில் 01 சமுர்த்தி சங்கத்தினரினால் இன்று ஆலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பின் திருக்கோவில் பிரதேச இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 13ந் திகதி ஞாயிற்றுக்கிழமை தெய்விக கிராம ஆன்மீன் எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளன.

இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் டெங்கொழிப்பு சிரமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன இவ் சிரமதானப் பணிகளில் முருகன் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் சமுர்த்தி உத்தியேகதத்ர் மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.