துரைராசா ரவிகரன் எம்.பி மக்கள் சந்திப்பு!

0
31

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒதியமலைக் கிராமத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மக்கள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

சந்திப்பை தொடர்ந்து, வன வளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள, கருவேப்ப முறிப்புக்குளத்தின் கீழான மக்களின் வயல் நிலங்களையும், பாரிய நிதிச்செலவில் சீரமைக்கப்பட்டும், பயன்பாடு இல்லாமல் காணப்படும் கருவேப்ப முறிப்புக்குளத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.