அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி 06 எஸ்.என்.ரி லேனைச் சேர்ந்த அலிஅக்பர் அஸ்மா என்ற 21 வயதுடைய மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் திருமணம் செய்து இன்றுடன் மூன்று மாதமும் 3 நாட்களுமான நிலையில் ஒலுவில் தென்கிழக்கு பலக்லைக்கழகத்திற்கு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
நிந்தவூரில் டிப்பர்; வாகனமொன்றுடன் மோதுண்டதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி அலிஅக்பர் அஸ்மா உயிரிழந்துள்ளதுடன் கணவரும் காயமடைந்த நிலையில் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.