தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாணம் மாவட்ட அலுவகம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இந்த அலுவலகக் கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச, இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த திறப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகே, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் மற்றும் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.