தேசிய கனிஷ்ட பிரிவு கொக்கி அணிக்கு, 50 வருடங்களின் பின்னர் யாழ் மாவட்டத்தில் இருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் எஸ்.விதுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனிஷ்ட பிரிவு தேசிய கொக்கி அணிக்கு முதலாவது தடவையாக யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தும் யாழ் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஹொக்கி வீரனாக இவர் தடம்பதித்துள்ளார்.
இதேவேளை இடம்பெற்றுவரும் சுற்றுபோட்டியில் இதுவரை விதுசனால் ஒரு கோல் பதிவு செய்யபட்ட நிலையில் குறித்த மாணவன் சிறப்பாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.