வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல், நிழற்படமெடுத்தல், வீடியோ எடுத்தல், ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் வேறு போதைப்பொருட்களைப் பாவித்தல், மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருளை பாவித்துவிட்டு வருகைதருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.