வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் கொபேகனே பிரதேசத்தில் 57 வயதுடைய வாக்களிப்பு நிலைய ஊழியர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில் தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.