அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பின் தங்கிய துறைவந்தியமேடு கிராம மக்கள் தொடரும் மழை வெள்ளத்தினாலும், கிட்டங்கி தாம்போதி ஊடாக பாயும் வெள்ள நீர் காரணமாகவும் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகப் பிரிவில் உள்ள இக் கிராமத்தில் 68 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்பட்ட சிறிய மேட்டுப்பகுதியில் பாரம்பரிய கிராம மானதுறைவந்தியமேடு அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கூலித்தொழில் போன்வற்றையே அன்றாடம் செய்து தமது குடும்ப சீவியத்தை நகர்த்திவருகின்றனர்.
இந்நிலையில் இங்குவருடாவருடம் ஏற்படும் வெள்ளப்பாதிப்பினாலும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தற்போதுபிரதேசத்தில் நிலவும் சீரற்றகாலநிலையால் குறிப்பாக இக் கிராமத்திற்குள் நுழையும் மட்டக்களப்புதுறைநீலாவணைஊடாகபயணிக்கும் பாதைமற்றும் அம்பாறை சேனைக்குடியிருப்பு ஊடாக பயணிக்கும் பாதை ஆகியன நீரில் முழ்கியுள்ளதுடன் பாதைகளும் சேதமடைந்துள்ளன. மேலும் கிராமத்திற்குள் முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அக் கிராமமக்கள் நகர் பகுதியோடுதொடர்புகள் துண்டிக்கப்படும் நிலைக்குள்ளாகியுள்ளனர். மிகவும் ஆபத்தான முறையிலே தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்தால் கிராம மக்கள் தனித்து விடப்படும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
இம் மக்களை தொடரும் வெள்ளப்பாதிப்பில் இருந்து பாதுகாக்க கல்முனை சேனைக்குடியிருப்பு மற்றும் மட்டக்களப்பு துறைநீலாவணை ஆகிய இரு பகுதிகளில் பாலம் ஒன்றை அமைத்துத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.