யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு சென்றவர்கள் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயது முகமது அன்சாரி, அவர் மனைவி சல்மா பேகம் (35 வயது) மற்றும் இவர்களின் 10 வயது மகன் அன்ஸார் ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
இந்த மூவரும் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் சவுக்குக் காட்டில் இறக்கிய நிலையில், இந்தியக் கடலோரக் காவல் படையினர் கைதுசெய்தனர்.
இவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.