காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திர தேவி தொடருந்து பாணந்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலோர மார்க்கத்தின் சில தொடருந்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.