அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வளர்ந்து வரும் பெண் தொழில் அதிபர்களில் காரைதீவு பெண் கோ.சிவஜோதியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் வளர்ந்துவரும் முதல் 50பெண்களில் ஒருவராக சிவஜோதி தெரிவுசெய்யப்பட்டமை பலரதும் பாராட்டையும் பெற்றுள்ளது.
அத்தகைய பெண் தொழிலதிபர்களை பாராட்டும் விதமாக 18ஆம் திகதி வுமன் ரொப் 50 2021 விருது வழங்கும் விழா கொழும்பு தனியார் விடுதியில் நடைபெற்றது.
விழாவில் காரைதீவு லக்ஸ்மி புரோடக்ஸ் உரிமையாளரான கோ.சிவஜோதி வுமன் ரொப் 50 2021 விருது வழங்கப்பட்டது.