தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாடு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 03 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மகாநாட்டில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொள்ள உள்ளார்.
இந் நிகழ்வில் சிறப்புரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் ஆற்றவுள்ளதுடன், மாநாட்டின் தீர்மானங்களும் அறிவிக்கப்பட உள்ளது.