நற்பட்டிமுனையில் யானையால் தோட்டம் நாசம்

0
436

அம்பாறை மாவட்டத்தில் யானைகள் காரைதீவூ பிரதேச எல்லைகளை ஊடறுத்து சாய்ந்தமருது கல்முனை போன்ற வயல் வெளிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் சென்று பயிரழிப்பில் ஈடுபடுகின்றது.

நற்பட்டிமுனை 02 பிரிவில் காட்டு யானை ஒன்று பப்பாசி தோட்டத்தில் புகுந்து தோட்டத்தை அழித்து நாசம் செய்துள்ளது.

மரக்கன்றுகளை சேதப்படுத்தி மீண்டும் அயலவர்கள் மதில் சுவர்களை உடைத்து வாழை மரங்களை முறித்து பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக கல்முனைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.