நல்லை ஆதீன முதல்வர் பிறிதொரு இடத்தில் ஜனாதிபதியைசந்திக்க தேவையில்லை!ஆறு திருமுருகன்,

0
173

நல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்ன நல்லையாதீனத்தின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார் இன்றைய ஜனாதிபதியுடனான சர்வமத தலைவர்களுடான சந்திப்பினை புறக்கணித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

 இன்றைய   சர்வ மத தலைவர்களின் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதேபோல எங்களது அடையாள அட்டை இலக்கங்களும் அதிகாரிகளால் கேட்கப்பட்டது

 ஆனால்  ஏற்கனவே ஜனாதிபதியிடம் முன்வைத்த  கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியினால் எந்தவித ஆக்கபூர்வமானதீர்வும் வழங்கப்படவில்லை என்பதனாலும் நெல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்தில் ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்பதனாலும் நானும் நல்லை ஆதீன குருமுதல்வரும் இன்றைய ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின்கூட்டத்தில்  பங்கேற்கவில்லை என தெரிவித்தார்,