யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த 71 வயது வயோதிபர் ஒருவருக்கு நேற்றையதினம் தொற்று ஏற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் கடந்த 18 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டு வைத்திய பரிசோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுளுளது.
காங்கேசன் துறை கடற்படை முகாமை சேர்ந்த சிப்பாய்கள் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்திலிருந்து இது வரையான காலப்பகுதியில் வடமாகாணத்தில் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
மருதங்கேணி தனிமைப்படுத்த நிலையத்திலேயே தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஏற்கனவே 69 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.