நாகர்கோவிலில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

0
181

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவிலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக நாகர்கோவில் மகாவித்தியாலயம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 10:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன், முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் உட்பட்ட முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.