நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு

0
156

புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் சேவையில் ஈடுபடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் 40 வரையான தொழில்சங்கங்கள் இணைந்துள்ளன.