நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என விளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.