நாயொன்றினை கொலை செய்த பெண் கைது :மாங்குளம் பகுதியில் சம்பவம்

0
39

நாயொன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை மாங்குளம் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நாயொன்று கொலை செய்யப்பட்டமை தொடர்பான படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமையஇ 48 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரைஇ தண்டனை சட்டக் கோவை மற்றும் 1907 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மிருகவதை சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.