நாளை காலை 8.00 மணியுடன் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட சுகாதார ஊழியர்கள் சம்மேளனம் தீர்மானம்

0
137

சுகாதார ஊழியர்கள் சம்மேளனம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்தை, நாளை காலை 8.00 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார ஊழியர்கள் சம்மேளனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவே தீர்மானித்தோம். எனினும் சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று இரவு இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமை, சுகாதார அமைச்சர் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் தலையிடுவதாக கூறியமை மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டே எமது போராட்டத்தை நாளை காலை 8.00 மணியுடன் நிறைவுக்குக் கொண்டுவரவுள்ளோம்.

எமது போராட்டத்தை 10 நாட்களுக்கு பிற்போட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.