முல்லேரியாவில் தொற்றுநோய்களிற்கான தேசிய நிறுவகத்தில் காணப்பட்ட சீனாவை சேர்ந்த பிசிஆர் இயந்திரம் பழுதடைந்துள்ளது என மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமே பழுதடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒரே நேரத்தில் ஆயிரம் பிசிஆர் சோதனைகளையும் ஒரே நாளில் நாலாயிரம் பிசிஆர் சோதனைகளையும் செய்யக்கூடிய இயந்திரம் பழுதடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இயந்திரம் பழுதடைந்தமை குறித்த விபரங்களை சுகாதார அதிகாரிகள் பகிரங்கப்படுத்தவில்லை,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.