29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பதுளை மேல் நீதிமன்றில் ஆஜரான புலனாய்வு உத்தியோகத்தருக்கு கொரோனா

பதுளை மேல் நீதிமன்றில் வழக்கொன்றுக்கு ஆஜரான பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர், கொழும்பிலிருந்து பதுளை சென்று வழக்கொன்றில் நேற்று ஆஜராகியிருந்தார்.
இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதனால் அவர் உடன் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது


இந்நிலையில் பதுளை மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், பசறை சுற்றுலா நீதிமன்றம், பதுளை தொழில் மன்றம் ஆகியவற்றின் கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


இதற்கமைய பதுளை மேல் நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 18ஆம் திகதியும் ஏனைய நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 15 ஆம் திகதியும் அதற்குப் பின்வரும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இத்தகவல்களை பதுளை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி ரமேஸ்குமார் தெரிவித்தார்.


மேற்கண்ட நீதிமன்றங்களின் வழக்குகள் அனைத்திற்கும் பதுளை சட்டத்தரணிகள் குழுவினரே ஆஜராவதனால், தொற்று அச்சுறுத்தலின் பாதுகாப்பு கருதி பதுளை நீதிமன்ற கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles