பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்-பாதுகாப்புப் படையினர் ஐவர் பலி

0
18

பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலிலேயே இந்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை பாதுகாப்புப் படையினர் வாகனமொன்றில் பயணித்த வேளையில் அருகில் சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

குறித்த வாகனம் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனமும் வெடித்துச் சிதறியுள்ளது.இதேவேளை இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.